இன்று இந்தியா வருகிறார் சவுதி இளவரசர் சல்மான்
துபாய்: ரியாத் ஆளுநரான இளவரசர் சல்மான் நான்கு நாள் பயணமாக இன்று இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்று ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் துபாய்க்கு வந்து சென்றதை அடுத்து, இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் அழைப்பை ஏற்று இளவரசர் சல்மான் இந்திய பயணத்தை மேற்கொள்வதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதர் தல்மிஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இந்திய பயணத்தின் போது, மும்பையில் உள்ள பல்வேறு தொழிலதிபரிகளை சந்தித்து விட்டு, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரின்ஸ் சல்மான் சந்தித்து பேச உள்ளார்.
டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பிரின்ஸ் சல்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட உள்ளது.
நான்கு நாள் பயணத்தின் போது, டெல்லியில் உள்ள சவுதி பள்ளி, ஆக்ராவில் தாஜ் மஹால் ஆகியவை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரின்ஸ் சல்மான் விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications