வரிச்சலுகைகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் - பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்க கூட்டத்தில் அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோது, அதிலிருந்து இந்திய தொழில்களைக் காக்க வரிச் சலுகை அளிக்கப்பட்டது. ]
தற்போது பொருளாதார தேக்க நிலை மாறி மீட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 2010-11-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்திவரி 2 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதைப் போல ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரிச் சலுகைகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும்.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.75 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பரவலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வரிச் சலுகைகள் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
2008-09-ம் நிதி ஆண்டின் பிற்பாதியில் சர்வதேச தேக்க நிலை காரணமாக வளர்ச்சி விகிதம் குறைந்தது. 2007-08-ம் நிதி ஆண்டில் 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி 6.7 சதவீதமாகக் குறைந்தது. இது 2009-10-ம் நிதி ஆண்டில் 7.2 சதவீதமாக உயர்ந்தது.
நடப்பு நிதி ஆண்டில் தனியார் முதலீடு அதிகரித்து பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். இதன் மூலம் முன்பு எட்டப்பட்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எளிதாக எட்ட முடியும்..." என்றார்












Click it and Unblock the Notifications