18ம் தேதி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 18ம் தேதி கோவையில் நடக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கட்சி ஆரம்பித்தது முதல் இதுவரை எந்தவித பாதிப்பையும், யாருக்கும் ஏற்படுத்தாத ஒரே கட்சியாக திகழ்கிறது சமத்துவ மக்கள் கட்சி. கட்சி செயல்படுகிறதா என்று மற்றவ்ரகள் கிண்டலடிக்கும் அளவுக்கு செயலற்றுப் போய்க் கிடக்கிது இக்கட்சி.
இந்த நிலையில் திடீரென கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கோவையில் வருகிற 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு அவைத்தலைவர் வி.செல்வராஜ் தலைமை தாங்குகிறார். இதில், தொலைநோக்கு பார்வையோடு, நாட்டு மக்கள் நன்மை கருதி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, துணை பொதுசெயலாளர் என்.சண்முக சுந்தரம் தலைமையில் கோவை மாவட்ட செயலாளர்கள் கணேசன், ஜெய்சங்கர், நேருஜி, திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் ரத்னா ஜெ.மனோகர், எம்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications