டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: 4 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்றனர்.
நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பதவி இடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றுள்ளது.
மொத்தம் 1,225 காலி இடங்களுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
இளநிலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், விவசாய பட்டதாரிகள் உள்பட 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் இப்பதவிகளுக்கு முன்னதாக விண்ணப்பம் செய்தனர்.
அவர்களில் தகுதியுள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வுகள் நடந்தன.
சென்னையில் மட்டும் 256 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடந்தன. சாந்தோம் செயிண்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற தேர்வில் திருமணமான பெண்கள் பலர் தேர்வெழுதினர்.
கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், திருமணமான தம்பதியர் பலர் நிறைய மையங்களில் தேர்வு எழுதினர்.
பரீட்சை நடக்கும் அறையில் செல்போன், கைப்பை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்பதால் வாசல் அருகே மொத்தமாக அவற்றை ஒருவர் வாங்கி வைத்திருந்தார்.
தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு அறையிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications