புதுச்சேரி – ப.சிதம்பரத்தைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு
புதுச்சேரி புதுச்சேரிக்கு வர வேண்டிய பல நலத் திட்டங்களையும், சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தடுத்து விட்டதாக கூறி அவரைக் கண்டித்த புதுச்சேரி சட்டசபையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று அதிமுக தலைவர் அன்பழகன் பேசுகையில், புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவிருந்த்து. ஆனால் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்திருந்த ப.சிதம்பரம் அதை ரத்து செய்து விட்டார். இதேபோல மேலும் பல நலத் திட்டங்களையும் அவர் ரத்து செய்து விட்டார் என்றார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், உறுப்பினர் அன்பழகன் கற்பனையில் பேசுகிறார். புதுச்சேரி மாநிலத்திற்கு பல திட்டங்களையும், வழி காட்டுதல்களையும் ப.சிதம்பரம் கொடுத்துள்ளார் என்றார்.
இதை ஏற்காமல் தொடர்ந்து பேசினார் அன்பழகன். மேலும் ப.சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். மேலும் அன்பழகன் பேசவும் தடை விதித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வெளியேறினர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications