காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஜீனை மேப் செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை

இந்திய விஞ்ஞானிகள் காசநோயை ஏற்படுத்தும் ஜீனை மேப்பிங் செய்திருப்புத இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவில் 3 லட்சத்து 30 ஆயிரம் இநதியர்களின் உயிரைப் பறித்து வரும் காச நோய்க்கு விலை மலிவான, தரமான, சக்தி வாய்ந்த மருந்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதகுறித்து அறிவியல் தொழிலக ஆய்வு கவுன்சில் (CSIR)தலைவர் சமீர் பிரம்மச்சாரி கூறுகையில், 100 அறிவியல் மாணவர்களுடன் இணைந்து இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டிருந்தது. ஆய்வு தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள், மருத்துப் பரிசோதனைக் கட்டத்தை நாம் எட்ட முடியும் எதிர்பார்க்கிறோம்.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுவரை இப்படி ஒன்றை நாம் செய்ததில்லை. இதில் ஈடுபட்ட அனைவரும் பிரமப்பூட்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த முயற்சியில் உலகில் உள்ள யாரும் நம்முடன் இணைந்து செயல்படலாம் என வரவேற்கிறோம் என்றார்.
காசநோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பத்தரை லட்சம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். ஆனால் காசநோய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக புதிய மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
காசநோய்க்கு புதிய வகை மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications