காலாவதி மருந்து வழக்கு எதிரொலி - மருந்து வணிகர் சங்கத்திலிருந்து மீனாட்சி சுந்தரம் நீக்கம்
சென்னை: காலாவதி மருந்து மோசடி வழக்கில் சிக்கிய மீனாட்சி சுந்தரம், மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காலாவதி மருந்துகளை புதியது போல் மாற்றியும், போலி மருந்துகள் தயாரித்தும் போலீசில் சிக்கியுள்ள மீனா ஹெல்த்கேர் அதிபர் மீனாட்சி சுந்தரம் சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.
மோசடித்தனம் அம்பலமாகி தற்போது மீனாட்சி சுந்தரம் மற்றும் கூட்டாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிதாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பாக சங்கத் தலைவராக இருந்துவந்த மீனாட்சி சுந்தரம் பதவி நீக்கப்பட்டார். சங்கத்தின் புதிய தலைவராக என்.ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
செயலாளராக பி.ராஜேந்திரனும், பொருளாளராக ஆர்.ராஜாராமும் நியமிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகளை பின்னர் தேர்ந்தெடுப்பது என பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் சங்கத் தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
'மருந்து வணிகம் என்பது, உயிர்களை காக்கக்கூடிய மிக உன்னதமான தொழில். அதில் மோசடிகளை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற புகார்கள் தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
காலாவதியாகும் நிலையில் உள்ள மருந்துகளை தனியாக பிரித்துவைத்து, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மருந்து தயாரிப்பாளர்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
மருந்து வாங்கும் பொதுமக்களுக்கும், அரசு மற்றும் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் இடையே பாலமாக நாங்கள் நல்ல முறையில் செயல்பட உறுதி எடுத்துள்ளோம்.
காலாவதி மருந்து வழக்கில் சிக்கிய சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டவர்களை அடிப்படை உறுப்பினர்கள் அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட்டோம்' என்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications