நெல்லையில் குழப்பம்- இடம் மாறிச் சென்ற பத்தாம் வகுப்பு விடைத்தாள்
திருநெல்வேலி: முசிறியைச் சேர்ந்த 262 மாணவர்களின் பிளஸ்டூ விடைத்தாள்கள் காணாமல் போன சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது நெல்லையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மாறிச் சென்று புதுக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி முக்கூடல் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 450 பேரின் சமூக அறிவியல் விடைத்தாள்கள் திருத்துவதற்காக திருச்சி மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை ஆர்.எம்.எஸ். எனப்படும் ரயில்வே மெயில் சர்வீஸ் மூலம அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில் –தஞ்சாவூர் ரயிலில் இநத விடைத்தாள் கட்டுக்கள் சென்றன. ஆனால் திருச்சி ரயில் நிலையத்திற்கு விடைத்தாள் கட்டுக்கள் வந்தபோது, அதை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள் வரவில்லை. இதனால் விடைத்தாள் பார்சல் கட்டுக்கள் நாகர்கோவிலுக்கே மீண்டும் போய் விட்டன.
இன்று விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியபோது முக்கூடல் பள்ளி விடைத்தாள்கள் வந்து சேராத்து தெரிய வந்த்து. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் போனது. அவர்கள் விசாரித்த்தில், பார்சல் மாறிப் போனது தெரிய வந்த்து.
இதையடுத்து ரயில்வே மெயில் சர்வீஸுக்குத் தகவல் தெரிவித்தபோது நாகர்கோவிலில் பார்சல் இருப்பதாகவும், அங்கிருந்து திருச்சிக்கு அது அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை விடைத்தாள் திருச்சிக்கு வந்து சேரவில்லையாம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications