சானியா திருமணம்: 23 வகை உணவுகளுடன் தடபுடல் விருந்து
Subscribe to Oneindia Tamil

ஹதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டது.
உணவுக்கு முந்தைய சூப் உள்ளிட்ட 'ஸ்டார்டர்' வகைகள் மட்டும் ஏழு விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிரதான உணவுக்கு பின்னர் சாப்பிடக் கூடிய டெஸர்ட்ஸ் 12 வகைகள் மனம் கமழ தயாராகி வருகின்றன.
பிரதானமாக ஹைதராபாதி ஸ்பெஷல் பிரியாணி இரண்டு வகையாக சமைக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர ஆந்திர புகழ் பத்தர்கா கோஷ் மற்றும் தனியாக ஒரு கபாப் கார்னர், சாலட் கவுன்டரும் உள்ளன.
திருமண நிகழ்ச்சிக்கு சுமார் ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
உணவு விருந்தின் போது, சானியாவின் மாமா தலாத் அஸிஸின் கஜல் பாடல்கள் உட்பட செவிக்கும் ரம்மியமான விருந்தும் அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications