அவசர அவசரமாய் நடத்தப்பட்ட சானியா-சோயப் திருமணம்!

இருவருக்கும் ஏப்ரல் 15ம் தேதிதான் திருமணம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இடையில் இரண்டு முறை முன்கூட்டியே திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை ஹைதராபாத் போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருப்பதாலும், அவர் மீதான ஆயிஷா தொடர்ந்த வழக்கு சட்டப்படி இன்னும் ரத்தாகாமல் இருப்பதாலும் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என ஹைதராபாத் காஜி அஸ்மத்துல்லா கூறியதால் கடைசி நேரத்தில் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சானியாவின் செய்தித் தொடர்பாளர் ருச்சா நாயக் கூறுகையில், இன்று சானியாவின் திருமணம் நடைபெறும். இன்று பிற்பகல் 1 மணிக்கு திருமணம் தாஹ் கிருஷணா ஹோட்டலில் நடைபெறு என அறிவித்தார்.
ஆனால் அதற்கு சற்று முன்பாகவே திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தாயார் சேலையைக் கட்டி..
தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. அப்போது சிவப்பு நிற சேலையில் மணக்கோலத்தில் இருந்தார் சானியா. இந்த சேலை, சானியாவின் தாயார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது கல்யாணத்தின்போது அணிந்திருந்த திருமணச் சேலையாம்.
சோயப் மாலிக் கருப்பு நிற ஷெர்வாணி அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் காணப்பட்டார்.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த வியாழக்கிழமை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
சானியா வீட்டிலிருந்து வெளியேறினார் சோயப்
முன்னதாக சானியாவைத் திருமணம் செய்வதற்காக ஹைதராபாத் வந்து, சானியாவின் வீட்டில் தங்கியிருந்த சோயப் மாலிக் தற்போது அங்கிருந்து வெளியேறினார்.
ஹைதராபாத்துக்கு ஏற்கனவே வந்து விட்ட சோயப் மாலிக், சானியாவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இது இஸ்லாம் அமைப்புகளின் கோபத்தை சம்பாதித்தது. இதுதொடர்பாக சன்னி உலமா வாரியம் நேற்று திடீரென சோயப், சானியா மீது பாத்வா விதித்தது.
கல்யாணத்திற்கு முன்பே சோயப் மாலிக், சானியா வீட்டில் சேர்ந்து இருப்பது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இதை ஏற்க முடியாது. கண்டனத்துக்குரியது. எனவே இஸ்லாமியர்கள் யாரும் இவர்களின் கல்யாணத்திற்குப் போகக் கூடாது என்று அந்த அமைப்பு அறிவித்த்து.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சானியாவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தவறான கருத்து பரவியிருப்பது குறித்து விளக்கம் அளிக்க இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. சிலர் சொல்வது போல சானியா வீட்டில் சோயப் மாலிக் தங்கியிருக்கவில்லை. சில நாட்களாக அவர் அங்கு தங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சன்னி உலமா வாரியத்தின் பாத்வாவைத் தொடர்ந்த சோயப் மாலிக், சானியா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சோயப்பின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சானியா வீட்டில்தான் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
இதற்கிடையே பாத்வா குறித்து அகில இந்திய சன்னி உலமா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படியெல்லாம் யாரும் பாத்வா விதிக்க முடியாது என்று தெரிவித்தார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications