இந்தியா - மலேசியா இடையே கூடுதலாக 6 விமானங்கள் இயக்க ஏர்ஏசியா முடிவு
கோலாலம்பூர்: இந்தியா - மலேசியா இடையே மேலும் ஆறு விமானங்களை இயக்க ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.
ஏர் ஏசியா குழும தலைவர் டோனி ஃபெர்னாண்டஸ் இதுபற்றி கூறியிருப்பதாவது:
ஏர்ஏசியா சேவையை துவக்கும் போது இரண்டு விமானங்களை மட்டுமே கொண்டிருந்தோம். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 92 விமானங்களுடன் இயங்கி வருகிறோம்.
மேலும் 120 விமானங்களை வாங்கியுள்ளோம். இவை வரும் 2015ம் ஆண்டுக்குள் சேவையை துவக்கிவிடும்.
கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு எங்கள் சேவை இருந்துவருகிறது. திருச்சி, திருவனந்தபுரம், கோல்கத்தா, கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன.
மலேசியா - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மேலும் ஆறு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.
பெனாங்கில் இருந்து கோல்கத்தாவுக்கு வரும் ஏப்ரல் 28ம் தேதியும், கோலாலம்பூர் - மும்பை இடையே மே 6ம் தேதியும் புதிய சேவைகள் தொடங்குகின்றன.
இதைத்தொடர்ந்து கோலாலம்பூரில் இருந்து சென்னை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டிலேயே ஆறு புதிய சேவைகளும் துவக்கப்பட்டு விடும். இதற்கு அடுத்தபடியாக எங்களின் இலக்கு அமிர்தசரஸ்' என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications