மருத்துவ உபகரணங்கள் இறக்குமதியில் முறைகேடு - பிஷப்புக்கு சுங்கத்துறை அபராதம்!
சென்னை: அமெரிக்காவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பேராயர் தேவசகாயம். சென்னையில் பேராயத்துக்கு சொந்தமான கல்யாணி மருத்துவமனை உள்ளிட்டவை இவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன.
இந்த மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களின் மூலமாக பல்வேறு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வருவதுண்டு.
இந்தநிலையில் வேர்ல்ட் மெடிக்கல் ரிலீஃப் என்ற யூஎஸ் நிறுவனம், நகரியில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் மூலமாக அனுப்பியது.
எக்ஸ்ரே கருவிகள், டயலசிஸ், இசிஜி இயந்திரங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் மருந்துகள் உட்பட பல பொருட்கள் அனுப்பப்பட்டன.
இவற்றை இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு புகார் வந்தது. விசாரணையில், பொருட்களின் மதிப்பை குறைவாக மதிப்பிட்டு, குறைந்த அளவு வரி கட்டியிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து சென்னை சுங்கத்துறை கமிஷனர் ராஜன் பேராயர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், 'அமெரிக்காவில் இருந்து ரூ.2.22 கோடி மதிப்புள்ள மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 142 வரியாக செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் அவற்றை குறைத்து மதிப்பிட்டு குறைவாக வரி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது.
அதிக அளவு மதிப்புள்ள இதுபோன்ற பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், வரிச் சலுகைக்காக அரசை ஏற்றுமதியாளர்கள் அணுகலாம்.
சுங்கத் துறை சட்டத்தின்படி முறைகேடாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். ஆனால் அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே கொண்டுவரப்பட்டுவிட்டன.
எனவே, நகரியில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம், ரூ.1.34 கோடி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும். டாக்டர் ராஜகுமாரி சுந்தர், பிஷப் தேவசகாயம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள், ஏசுவின் வழிகாட்டுதலுக்கு புறம்பாக நடந்துள்ளனர். வரி செலுத்துங்கள் என்றுதான் ஏசு கூறி இருக்கிறார்' என்று சுங்கத்துறை கமிஷனர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications