மதுரை மாவட்ட கலெக்டராக காமராஜ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக சி.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக மதிவாணன் கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த ஆண்டு அடிக்கடி விடுப்பில் சென்ற வண்ணம் இருந்தார்.
கடந்த இரு மாதங்களாக அவர் தொடர் விடுப்பில் இருந்த நிலையில், டிஆர்ஓ தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலெக்டர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் மதுரைக்கு புதிய ஆட்சித் தலைவராக தர்மபுரியை சேர்ந்த சி.காமராஜை தமிழக அரசு நியமித்துள்ளது.
தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உட்பட பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த காமராஜ் இதற்குமுன் செய்தி மக்கள் தொடர்பு இயக்குனராக இருந்தவர்.
கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டு குழுவிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications