அதிமுக டெபாசிட் இழப்பு-3 மதிமுக நிர்வாகிகள் நீக்கம்!
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்யாத 3 மதிமுக நிர்வாகிகளை நீக்கியுள்ளார் அக் கட்சியின் பொது செயலாளர் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்புலர் பி.சம்பத், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.குமார், தர்மபுரி நகர பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், அவர்கள் வகித்து வரும் பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர், தர்மபுரி நகர பொறுப்பாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. இந்தத் தொகுதியில் அதிமுகவுக்காக ஜெயலலிதாவை விட அதிகமாகவே பிரச்சாரம் செய்தார் வைகோ. ஆனால், சில மதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணியை சரியாகச் செய்யவில்லை என்று அதிமுக தரப்பில் இருந்து மதிமுவுக்கு புகார் போனதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இந்த மூவரையும் நீக்கியுள்ளார் வைகோ.


Click it and Unblock the Notifications
