ஆஸியில் இந்திய மாணவர் மீது கடும் தாக்குதல் - பார்வை பறிபோனது
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
தன்னை தாக்கிய இனவெறியாளர்கள், 'உங்கள் நாட்டுக்கு திரும்பிப் போய்விடு' என அதட்டியதாக இந்திய மாணவர் கூறியுள்ளார்.
நீரஜ் பரத்வாஜ் என்ற 23 வயது இந்திய மாணவர் கடந்த திங்கள் கிழமை மெல்போர்ன் அக்வாரியம் அருகே அமர்ந்துகொண்டிருந்தார்.
அப்போது போதையில் இரண்டு பேர் இவரின் அருகே வந்துள்ளனர். வெள்ளையினத்தவராக அறியப்பட்ட அவர்களின் வயது 20களில் இருக்கும் என ஆஸ்திரேலிய பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பாவியாக உட்கார்ந்து கொண்டிருந்த நீரஜ்ஜிடம் இரண்டு நபர்களும் வந்துள்ளனர். பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுக்குமாறு நீரஜ்ஜை மிரட்டியுள்ளனர்.
அதிர்ச்சியில் விழித்த நீரஜ் பர்சை தர முடியாது எனக்கூறியுள்ளார். உடனே சரமாரியாக நீரஜ்ஜுக்கு குத்து விழுந்துள்ளது.
அதற்கு பின் நீரஜ் நினைவை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நீரஜ்ஜுக்கு சுய நினைவு திரும்பி மெல்ல எழுந்து உட்கார்ந்திருக்கிறார்.
அப்போது மீண்டும் அங்கு வந்த இரண்டு மேரும் மறுபடியும் தாக்கியுள்ளனர்.
அப்போது, அந்த இரண்டு பேரும் நீரஜ்ஜை நோக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, 'உன் சொந்த நாட்டுக்கு ஓடிவிடு' எனக் சத்தம் போட்டுள்ளனர்.
நீரஜ்ஜுக்கு வலது கண்ணில் கடுமையான அடிபட்டு, 90 சதவீத பார்வை திறன் பறிபோய்விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் நீரஜ்ஜின் மூக்கு உடைபட்டுவிட்டது. உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த நீரஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications