தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை: மன்மோகன்
வாஷிங்டன்: மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
சுமார் 166 பேரை பலிகொண்ட மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பான ஆதாரங்களை அளித்த பின்னரும் பாகிஸ்தான், இந்த ஆதாரங்கள் போதவில்லை எனக் கூறிவருகிறது.
இவ்விவகாரத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இதர இருதரப்பு பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளன.
இந்நிலையில், வாஷிங்டனில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த அணுசக்தி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கிலானி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமரும், இந்திய பிரதமரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கப்பட்டன.
இதன் மூலம், மும்பை விவகாரம் தொடர்பாக சாதகமான அறிகுறிகளை பாகிஸ்தான் பிரதமர் வெளிப்படுத்துவார் என இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை.
இதுபற்றி நேற்று இரவு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட மன்மோகன் சிங்,
'வாஷிங்டனில் அணுசக்தி மாநாடு நடைபெற்ற இந்த இரண்டு நாளில், இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ராஸா கிலானியை சந்தித்தேன்.
ஆனால் அந்த சந்திப்புகளில் எந்த வித முக்கியமான தகவல் பரிமாறல்களும் இடம்பெறவில்லை.
பாகிஸ்தானில் பிரதமருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமீபத்தில், அரசியல் சாசன சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதற்காக நான் அவரிடம் வாழ்த்துக்கள் கூறினேன்.
ஆனால், அதற்கு அப்பாற்பட்டு எந்த வித பேச்சுவார்த்தையும் அப்போது நடந்துவிடவில்லை.
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் பாகிஸ்தானிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
அதை அவர்கள் செய்து விட்டால், அடுத்தபடியாக இருக்கக் கூடிய இருதரப்பு விவகாரங்கள் பற்றி தாராளமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணலாம்.
மும்பை தாக்குதல் விவகாரத்தை பொறுத்தவரை இதற்கு மேல் எந்த ஆதாரமும் பாகிஸ்தானுக்கு தரவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications