பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் காவேரிபாக்கத்தில் பகுதியில் பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நான்கு வழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இன்று அதிகாலை 3 மணிக்கு இச் சம்பவம் நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அங்கு தனியே இருந்த ஊழியர் ஜெகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரடடி பணப் பெட்டியில் இருந்த ரூ. 28,000த்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினர்.
சுதாரித்துக் கொண்ட ஜெகன் சத்தம் போட்டு உதவி கோரியபடி கொள்ளையர்களை விரட்டினார். இதையடுத்து அப் பகுதியினர் சிலர் ஓடி வரவே பயந்து போன கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த காவேரிபாக்கம் போலீசார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications