ஜனாதிபதி மாளிகைக்கு சோனியா பேசுவதாக போலி போன்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஜனாதிபதி மாளிகைக்கு போலி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இது குறித்து உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கடந்த மாதம் 28ம் தேதி ஜனாதிபதி மாளிகைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அது பொதுத் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்பு என்பதால் அது போலியான அழைப்பு என்பதை அறிந்து கொண்ட ஜனாதிபதி மாளிகையின் தொலைபேசி மையத்தினர், அவரிடம் நீங்கள் யார் என்று விவரம் கேட்கவே அவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
மீண்டும் இரவு 9 மணிக்கு அவர் அழைத்து சோனியாவின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறவே, அவரிடம் உங்கள் எண்ணை கொடுங்கள்; நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்றனர்.
இதையடுத்து அந்த நபர் இந்த விவகாரத்தை உயர்மட்ட அளவில் எடுத்துச் செல்வேன் என்று கூறியபடி ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அவரது அழைப்பை டிரேஸ் செய்தபோது, அதுவும் ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் போலீசில் புகார் செய்ததையடுத்து உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications