கல்வியறிவு, தொழில்வளர்ச்சி இருந்தால் ஜாதி பாகுபாடு நீங்கும் - ஐஜி அலெக்சாண்டர் மோகன்
தூத்துக்குடி: நாட்டில் கல்வியறிவு, தொழில்வளர்ச்சி, விட்டுக்கொடுக்கும் தன்மை, சிறந்த அதிகாரிகள் இருந்தால், அந்த இடத்தில் ஜாதி பாகுபாடு நீங்கும் என்று சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி அலெக்சாண்டர் மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் சார்பில், சமூகநீதி விழிப்புணர்வு பிரசார பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி அலெக்சாண்டர் மோகன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'நம்மிடத்தில் இப்போது தீண்டாமை இல்லை. அது, அகராதியில் ஒரு வார்த்தையாக மட்டும் உள்ளது.
கல்வியறிவு, தொழில்வளர்ச்சி, விட்டுக்கொடுக்கும் தன்மை, சிறந்த அதிகாரிகள் இருந்தால், அந்த இடத்தில் ஜாதி பாகுபாடு நீங்கும்.
மனிதர்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்களில் ஜாதிபாகுபாடால் பின்னடைவு ஏற்படுகிறது. ஜாதி பாகுபாடு பாராமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்' என்றார்.
இந்த விழாவில் டி.ஆர்.ஓ. துரை ரவிச்சந்திரன், விரைவு நீதி மன்ற நீதிபதி மேரி அன்சலம், எஸ்.பி. செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications