ரெண்டஸ்வஸ் நிறுவன உரிமையாளர்களின் முதலீடு குறித்து விசாரிக்க மகா. அரசு முடிவு
மும்பை: ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைலேந்திர கெய்க்வாட் மற்றும் அவரது தம்பி ரவி கெய்க்வாட் ஆகியோர் ஐபிஎல் கொச்சி அணியில் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படும், அதில் முறைகேடுகள் இருக்கிறதா என்பது ஆராயப்படும் என மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது.
சைலைந்திர கெய்க்வாட் ஏற்கனவே, 2009ம் ஆண்டு நடந்த பைக் இறக்குமதி ஊழல் தொடர்பாக மகாராஷ்டிர அரசின் கண்காணிப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெய்க்வாட் சகோதரர்களுக்கு ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 75.4 சதவீத பங்குகள் உள்ளன. சைலேந்திர கெய்க்வாட், சோலாப்பூரில் பெருமளவிலான நிலங்கள் உள்ளன. ரவி கெய்க்வாட், பீத் நகரில் பிராந்திய துணை போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் கொச்சி சர்ச்சையில் இவர்கள் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்களின் பணப் புழக்கம், முதலீடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிரம நில போக்குவரத்துத் துறை செயலாளர் சங்கீத் ராவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், கொச்சி ஐபிஎல் நிறுவனத்தில் ரவி கெய்க்வாட் செய்துள்ள முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
கடந்த ஆண்டு அந்தேரி மற்றும் போக்குவரத்து அலுவலகங்களில் வெளிநாட்டிலிருந்து மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவை சட்டவிரோதமாக பதிவ செய்யப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்த்து. வெளிநாடுகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து இங்கு வைத்து அசெம்பிள் செய்து வரி ஏய்ப்பு நடந்த்து.
இந்த முறை கேட்டில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்த்தாகவும் குற்றச்சாட்டு எழுந்த்து. இதில் ரவி கெய்க்வாட் சிக்கினார். அதுதொடர்பாக இன்னும் அவர் விசாரணை வளையத்திற்குளதான் இருக்கிறார்.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அந்தேரி ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றி வந்தார ரவி. பைக் ஊழலுக்குப் பின்னர் அவர் மரத்வாடா மாவட்டம் பீத் நகருக்கு மாற்றப்பட்டார். ஆனால் அதில் அவர் சேராமல் நீண்ட விடுப்பில் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத் துறை இந்த பெரும் ஊழல் குறித்து அவர் மீது குற்றம் சாட்டி குற்றப்த்திரிக்கை வழங்கியது. ஆனால் இதுவரை அவர் அந்த புகார்களுக்கு பதிலை அளிக்கவில்லை. அந்தப் பதில் வந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர போக்குரவத்துத் துறை கூறியுள்ளது.
இந்த நிலையில்தான் ஐபிஎல் விவகாரத்தில் சிக்கியுள்ளார் ரவி. மகாராஷ்டிர அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளின்படி ஒரு தனியார் நிறுவனம் அல்லது பெருமளவிலான முதலீடுகளைச் செய்தால் அதற்கு முன்பு அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் ரவி கெய்க்வாட் அவ்வாறு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதுக்குறித்து சங்கீத் ராவ் கூறஉகையில், முதலில் ரவி கெய்க்வாட்தானா இவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்தான் என்பது உறுதியானால் நிச்சயம் அவர் மீது நடவடிக்கை பாயும் என்றார்.
இதேபோல ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் 5.6 சதவீத பங்குகளை வைத்துள்ள ஜெயந்த் கோதல்வாரும் சிக்கலில் மாட்டியுள்ளார். ஜெயந்த்தின் குடும்பம லத்தூரில் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது.
ஜெயந்த்தின் தம்பி ஹேமந்த் கோதல்வார், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி ஆவார். தற்போது இவர் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பிரனீத் கவுரிடம் ஸ்பெஷல் டூட்டி அதிகாரியாக உள்ளார். இதற்கு முன்பு மும்பை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்தார்.
எனவே இவரும் தற்போது விசாரணை வளையத்திற்கள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications