ராமலிங்கராஜுவுக்கு மஞ்சள் காமாலை – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஹைதராபாத்: சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு மஞ்சள் காமாலை (ஹெபாடிடிஸ் பி) ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜுவின் ரத்தத்தில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அவரது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 3100லருந்து 2300 கியூபிக் மில்லிமீட்டர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளதாம். வழக்கமாக இது 6000 முதல் 12,000 கியூபிக் மில்லிமீட்டராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை வட்டாரங்கள் இதுகுறித்துக் கூறுகையில், 36 வாரங்களுக்கு ராஜுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வாரம் ஒரு ஊசியும் போடப்பட வேண்டும் என்றனர்.
ஆனால் இந்த மருந்துகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாம். மூளை, வயிறு மற்றும் நுரையீரல் ரத்தக் கசிவை ஏற்படுத்த் கூடிய அபாயத்தைக் கொண்டவை என்றும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த ஊசி போடப்பட்டவுடன்தான் ராஜுவின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்புகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவருக்கு ஹெபாடிடிஸ் சி ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஹெபாடிடிஸ் பி ஏற்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications