குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க 8 மாவட்டங்களுக்கு ரூ.14 கோடி- தமிழக அரசு ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் எட்டு மாவட்டங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.14 கோடி வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை வாசித்தார்.
அதில், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் எட்டு மாவட்டங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.14 கோடி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்த நிதியின் மூலம், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், தூர்வாரி கிணறுகளை ஆழப்படுத்துதல், பம்பு செட்டுகளை பழுது பார்த்தல் முதலிய பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
விருதுநகர், திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய எட்டு மாநிலங்களுக்கு சேர்த்து ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.4 கோடி கடந்த 12ம் தேதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக பிற மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தேவையான நிதி உதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இயல்பான மழை அளவான 990.1 மிமீ மழைக்குப் பதிலாக சராசரியாக இரண்டு சதவிகிதம் அதிகமாக - அதாவது 1010.4 மிமீ மழை பெய்துள்ளது.
இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு குறைவாக உள்ளது. 2010ம் ஆண்டிலும் ஜனவரி முதல் இதுவரை தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு குறைவாகவே பெய்துள்ளது.
கடுமையான கோடை வெயில் காரணமாக ஒருசில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசுக்குத் தெரிவித்துள்ளார்கள் என்றும் துணை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications