பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி ரூ.2.5 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தில் பகுதியில் நான்கு வழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னையிலும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகர் ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இச் சம்பவம் நடந்தது. நேற்று காலை 7 மணியளவில் கேஷியர் பிரதாப் மட்டும் தனியே இருந்தார். இரவு வசூலான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கேஷியர் அறைக்கு முன் வண்டியை நிறுத்தினர்.
ஒருவன் பைக்கை ஸ்டார்ட் செய்த நிலையிலேயே வைத்திருக்க, இன்னொருவன் பிரதாப்பின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 2.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டான்.












Click it and Unblock the Notifications