ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 100 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
மதுரை: ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 100 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைத் திரும்பப் பெறக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளனராம்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடந்த மார்ச் 17ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது 100 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சிவகங்கையில் 20 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தென் சென்னையில் தலா 14 பேர், கோவை, குமரியில் தலா 10 பேர், ஈரோட்டில் 8, ஊட்டியில் 7, விழுப்புரத்திதல் 6, மதுரையில் 5, கடலூர், மத்திய சென்னையில் தலா 3 பேர் என மொத்தம் 100 பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.
இந்த நீக்கத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அது இதற்காக போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications