தங்கம் விலை ரூ.176 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலையில் இன்று ஒரே நாளில் ரூ 176 குறைந்தது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 512-க்கு விற்கப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.12 ஆயிரத்து 544-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.176 குறைந்தது. பவுன் ரூ.12 ஆயிரத்து 368-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.1546 ஆக இருந்தது.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு வாடிக்காயாளர்களுக்கு சற்று திருப்தியை அளித்துள்ளது.
பிற்பகலுக்குப் பிறகு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நகைக் கடைகளுக்கு மக்கள் கூட்டம் வரத் துவங்கியதாக தி நகர் நகை வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் நாட்களில் தங்கத்தின் விலை நிலையற்றதாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications