நிதியமைச்சர் அன்பழகன் பேரனிடம் திருடிய மாடலிங் பயிற்சியாளர்!
சென்னை: நிதியமைச்சர் அன்பழகனின் பேரனை மாடலிங் நடிகர் ஆக்குவதாக ஆசைகாட்டி நகை, பணத்தை திருட்டிக் கொண்டு ஓடிவிட்டார் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு மோசடிப் பேர்வழி.
நிதியமைச்சர் அன்பழகனின் மகன் ராஜேந்திர பிரசாத்தின் மகன் கிரிதர்பாபு (19). பிஇ படிக்கும் இவர் மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர்.
இவர் மாடல் ஆக விரும்பி முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக இ-மெயில் மூலம் மும்பையை சேர்ந்த பிரபல மாடலிங் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டார்.
அவர் நிஷே பவார் என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவர் கடந்த 12ம தேதி சேத்துப்பட்டில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியபடி கிரிபாபுவை சந்தித்தார். அங்கு வைத்து ஒரு மாதம் கிரிபாபுவுக்கு மாடலிங் கிளாஸ் எடுத்தார்.
கடந்த 14ம் தேதி கிரிபாபு தான் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகை, ரூ.10,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை மேஜையில் வைத்துவிட்டு பாத்ரூம் போய்விட்டு வெளியில் வருவதற்குள் அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நிஷே பவார் ஓடிவிட்டார்.
இது குறித்து கிரிபாபு சேத்துப்பட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications