வீராணம் ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர திட்டம்!
சென்னை: வீராணம் திட்டத்துக்காக அமைக்கப்ட்ட ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.
பூண்டி ஏரியில் 1,606 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 2,613 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் 2,375 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருக்கிறது.
சோழவரத்தில் 105 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. வீராணத்தில் 556 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இந்த
ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீர் கடந்த ஆண்டு இதே நாளில் தண்ணீரை ஒப்பிடும்போது சுமார் 1,500 மில்லியன் கனஅடி குறைவாகும்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர், கடந்த ஆண்டுகளில் அதிகப்பட்சமாக 6 டிஎம்சி வரை வந்துள்ளது. ஆனால் இந்த முறை 7.11 டிஎம்சி தண்ணீர் கிடைத்திருக்கிறது.
இந்த ஆண்டு பருவமழை சென்னை பகுதியில் குறைவாகப் பெய்ததால், கிருஷ்ணா தண்ணீர் ஓரளவு கை கொடுத்துள்ளது.
தற்போது கிருஷ்ணா கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடப்பதாலும், கோடை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் ஆவியாகி வீணாகும் என்பதாலும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கண்டலேறு அணையில் 6.3 டிஎம்சி தண்ணீர் இருந்தாலே சென்னைக்கு தண்ணீர் விட முடியும். இப்போது 19.64 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது.
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கிவிடும். எனவே மீண்டும் ஜூன் மாதம் கிருஷ்ணா தண்ணீர் வர வாய்ப்புள்ளது.
தற்போது குடிநீர் ஏரிகளில் இருக்கும் தண்ணீர் டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு வினியோகிக்க போதுமானது. எனவே, இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என நம்பப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு வருகிறது. ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இந்தமாத இறுதியில் இந்த தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
இதற்கு பதிலாக அடுத்த மாதம் முதல் வீராணம் ஏரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு குழாய் மூலம் அனுப்பப்பட உள்ளது.
சென்னை நகரில் இப்போது தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications