இளைஞர் காங். தலைவராக பொறுப்பேற்றார் யுவராஜா
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யுவராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வாழ்த்து கூறினார்.
தமிழகத்தில் பல கட்டமாக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்த்து. இறுதியில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த வரதராஜன் துணைத் தலைவரானார்.
காயத்திரி, மகேந்திரன், பிரபு, விஜய் இளஞ்செழியன், அமீர் ஜாகீர், அப்பாஸ், அர்த்தநாரி, சத்யா ஆகியோர் பொதுச் செயலாளராக வெற்றி பெற்றனர்.
இன்று சத்யமூர்த்தி பவனில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான விஷ்ணுநாத் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
பதவியேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் யுவராஜா பேசுகையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி முயற்சியால் தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றுள்ளது. இதில் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதிநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 13,000 கிராம ஊராட்சிகளில் காங்கிரஸ் கொடி கம்பங்கள் நடப்படும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களை தமிழக மக்களிடம் இளைஞர் காங்கிரஸ் எடுத்து செல்வதற்கு பணியாற்றும். அதே போல் இளைஞர் காங்கிரஸ் சார்பாக பிரச்சார இயக்கங்களும் தொடங்கப்படும்.
தமிழகத்தில் மக்களை சந்திப்பதோடு அவர்களின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசிடம் இளைஞர் காங்கிரஸ் எடுத்து கூறும். தேவைப்பட்டால் மக்களுடன் சேர்ந்து போராடவும் இளைஞர் காங்கிரஸ் தயாராக உள்ளது.
இளைஞர் காங்கிரசில் தற்போது 12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இளைஞர் காங்கிரசில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் ராகுல் காந்தி தலைமையில் செயல்பட உள்ளோம். நாங்கள் எந்த அணியினையும் சார்ந்தவர்கள் அல்ல இளைஞர் காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு இடமில்லை என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications