விரைவில் வருகிறது உணவு உரிமை சட்டம்: ப.சிதம்பரம்
சென்னை: கல்வி உரிமையை அடுத்து உணவு உரிமை சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற அம்பேத்கர் 119வது பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
விழாவில் சிதம்பரம் பேசுகையில், 'மக்களுக்கு அரசியல் சுதந்திரம் மட்டுமல்லாது பொருளாதார சுதந்திரமும் வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.
இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றை கட்டாயமாக்கி உள்ளோம்.
அதே போல உணவு உரிமை சட்டத்தையும் கொண்டுவர மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் இந்த சட்டம் விரைவில் அறிமுகமாகும்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நாடு வேகமான பொருளாதார வளர்ச்சியை காண்கிறது.
அதோடு, அனைத்து தரப்பு மக்களையும் வளர்ச்சி சென்றடையும் சூழல் உருவாகிறது.
கல்வித் துறையில் மாணவர்களுக்கு கடன் வழங்குதல், ஊக்கத் தொகை வழங்குதல், குறிப்பாக தலித் மாணவர்களுக்கான சலுகைகள் இதுவரை இல்லாத அளவுக்கு அவர்களை சென்று சேர்ந்துள்ளது.
கடந்த 2008-09ம் ஆண்டில் ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்காக ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.
2009-10ம் ஆண்டில் இந்த தொகை ரூ.45 ஆயிரம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது. 25 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள்' என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications