அதிமுக ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம்- ஜெ.
நெய்வேலி: திமுக ஆட்சியில் மின் நிர்வாகம் மோசமாக இருப்பதால் ஆண்டுக்கு ரூ. 2522 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வகை செய்வோம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா
தமிழகத்தில் நிலவும் மின் தடை மற்றும் பற்றாக்குறையைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா தலைமையில் இன்று நெய்வேலியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்காக ஜெயலலிதா இன்று மாலை நெய்வேலிக்கு வந்தார். நெய்வேலி வந்து சேர்ந்த அவருக்கு அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நெய்வேலி 9வது வட்டத்தில் 19 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டு இது நாள் வரை திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை ஜெயல்லிதா திறந்து வைத்தார்.
பின்னர் அண்ணா திடலில் நடந்தபிரமாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார்.
அப்போது ஜெயல்லிதா பேசுகையில், திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு மாநிலமாக மாறி விட்டது தமிழகம். மின் நிறுவனங்களுக்கான நிலக்கரி இறக்குமதி செய்வதில் இமாலய ஊழல் நடந்துள்ளது.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதாலும், மின் நிலையங்கள் பரமாரிப்பு முறையாக இல்லாததாலும், தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் ரூ. 2522 கோடி அளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் பின் பற்றாக்குறையும், மின் தடையும் நீங்கும். தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார் ஜெயல்லிதா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications