தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று வாலிபர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் மேலஅம்பாசமுத்திரம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பலியான நடராஜன்(22), முத்துக்குமார் (20) மற்றும் கருப்பையா (18) ஆகிய மூவரும் மூவரும் மேல அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

கடந்த 13ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து சட்டசபைத் தலைவர் ஆவுடையப்பன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மூலமாக முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு சென்றது.

இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+