பாங்காக்குக்கு கிங்ஃபிஷர் நிறுவனத்தின் 2 புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மும்பை மற்றும் டெல்லியில் இருந்து பாங்காக்கிற்கு புதிதாக இரண்டு விமான சேவைகளை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இன்று முதல் துவக்கியுள்ளது.
இதன் மூலம் மும்பையில் இருந்து நாலாவது சர்வதேச சேவையையும், டெல்லியில் இருந்து மூன்றாவது சர்வதேச போக்குவரத்தையும் கிங்ஃபிஷர் துவக்கியுள்ளது.
இந்த புதிய சேவைகள் இரண்டும் ஏ320 விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். கேபின், ஃபைவ்ஸ்டார் சொகுசு வசதிகளும் இந்த விமானங்களில் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம், தாய்லாந்து இந்தியாவுக்கு இடையிலான போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என கிங் ஃபிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா கூறினார்.












Click it and Unblock the Notifications