பிரபாகரனின் தாயார் விவகாரம்-விவாதத்தை தவிர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்

ஆனால், அதில் அதிமுக உறுப்பினர்கள் யாரும் பங்கேற்று பேசவில்லை. ஆலோசனை கூட்டம் இருப்பதாகக் கூறி அனைவரும் வெளியில் சென்று விட்டனர்.
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துப் பேசியது. பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்த்துப் பேசினர்.
ஆனால், இந்த விவாதத்தில் பங்கேற்பதை அதிமுக தவிர்த்துவிட்டது. இந்த விவாதம் நடக்கவிருந்த நிலையில் தங்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியே சென்று விட்டனர்.
இந் நிலையில் இந்த விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, முன்பு அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியதோடு, இன்று அவையில் அதிமுகவினர் விவாதத்தில் பங்கேற்காததையும் சுட்டிக் காட்டிப் பேசினார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்:
இந் நிலையில் பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை அளிக்கக் கோரியும் அவர் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
அவருக்கு மீண்டும் அனுமதி கொடுத்து சிகிச்சை அளிக்காதவரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்:
அதே போல பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என ஐ.நா.சபை பிரகடனம் படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக போராடி உயிரை துறந்த பிரபாகரனின் தாய் பார்வதி அனாதையாக நிற்கிறார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. மனிதாபமற்ற செயல். இதை வன்மையாக கண்டிக்கிறேன். தூக்கு தண்டனை கைதியை கூட தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு மருத்துவ சிகிச்சை கொடுத்து ஆரோக்கியத்துடன் தூக்கிலிடுகிறார்கள். ஆனால் பிரபாகரனின் தாயாரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்கவும் வாழ்நாள் முழுவதும் தங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications