பிரணாப் முகர்ஜியுடன் சசி தரூர் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பதவியை நேற்று இரவில் ராஜினாமா செய்த சசி தரூர், இன்று திடீரென நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
ஐபிஎல் கொச்சி அணி, சுனந்தா சர்ச்சைகள் காரணமாக நேற்று இரவு பதவியை ராஜினாமா செய்தார் தரூர். இந்த நிலையில் இன்று அவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
ஐபிஎல் கொச்சி அணி தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக சமீபத்தில் மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகத்திலும், லலித்மோடியின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் முதல் கட்ட அறிக்கையையும் வருமான வரித்துறை சமர்ப்பித்தது.
இந்தப் பின்னணியில், இன்று பிரணாப் முகர்ஜியை தரூர் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications