அதிமுக எல்லா இடத்திலும் டெபாசிட் இழக்கும்-அமைச்சர்
சென்னை: அடுத்த தேர்தலில் அதிமுக எல்லா இடத்திலும் டெபாசிட் இழக்கும் நிலைமை ஏற்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார்.
சட்டசபையில் இன்று தனது துறைக்கான மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அவர் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
2001ம் ஆண்டு தமிழ் நாட்டில் மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சமாகும். தமிழக மக்கள் தொகை எண்ணிக்கை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதமாகும். 2009ம் ஆண்டு மக்கள் தொகை 6 கோடியே 74 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர் பணியிடங்கள் சீரமைக்கப்பட்டு கூடுதலாக 434 சிறப்பு மருத்துவர் பணி இடம் உருவாக்கப்பட்டு டாக்டர்கள் நியமனம் நடக்கிறது.
72,942 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை:
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 1 கோடியே 44 லட்சம் குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இத் திட்டத்தின் கீழ் 13.4.2010 வரை 71,942 நோயாளிகள் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்து பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ. 205 கோடியே 39 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மேலும் பல சிகிச்சை முறைகளை சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கலைஞர் காப்பீடு தொகைக்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2010-2011ம் ஆண்டுக்கு மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ. 3888.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
அமைச்சருடன் அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்:
இந் நிலையில் இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. அருள்மொழி தேவன் பேசுகையில்,
தமிழ்நாட்டில் காலாவதியான போலி மருந்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எதிலும் கலப்படம் என தினமும் செய்தி வருகிறது. ஓட்டேரியில் காலாவதியான மருந்து சாப்பிட்டு ஒரு பெண் இறந்திருக்கிறார். மருத்துவ துறை உயர் அதிகாரிகள் சிலர் மருந்து சப்ளை செய்யும், கம்பெனியில் லஞ்சம் வாங்குவதாக பிடிபட்டனர். எல்லா துறையிலும் ஊழல் பெருகி விட்டது. இதற்கு நிர்வாக திறமை இன்மையே காரணம்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: காலாவதியான மருந்துகளை எங்கள் ஆட்சியில்தான் கண்டுபிடித்து இருக்கிறோம். பிடிபட்ட இதே மீனாட்சிசுந்தரம் 2001ம் ஆண்டு ஒரே நாளில் அபராதம் கட்டி வெளியே வந்து விட்டார். எனவே பீதியை ஏற்படுத்தாதீர்கள்.
அருள்மொழிதேவன்: கன்னியாகுமரியைச் சேர்ந்த அதிகாரி லேப்டெக்னீசியன் பதவிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ரயிலில் வரும்போது பிடிபட்டார். சென்னையில் உள்ள வி.ஐ.பிக்கு கொடுக்க செல்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் இப்படி ஏதாவது குறை கூற முடியுமா?
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்: பொதுக்கூட்டம் போல் நீங்கள் பேசுகிறீர்கள். திமுக ஆட்சியின் காவல் துறைதான் தவறு செய்தவர்களை பிடித்தது. அதனால்தான் நீங்கள் பேசுகிறீர்கள். இதில் அரசியலை ஈடுபடுத்தி பீதியை உண்டாக்க வேண்டாம். நீங்கள் பேசுவது போல் எங்களுக்கும் பதில் பேச தெரியும் என்றார்.
திமுக அரசு கொண்டு வந்துள்ள இந்த காப்பீட்டு திட்டம் பார்சியல் இன்சூரன்ஸ் திட்டம் போல் உள்ளது. வளர்ந்த நாடுகள் கூட செனட் சபை ஒப்புதல் பெற்று திட்டம் கொண்டு வருவார்கள். ஆனால் நீங்கள் அவசரம் அவசரமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அனைத்து கட்சி பிரதிநிதிகள், அறிஞர்கள் கருத்தை கேட்டு கொண்டு வந்திருக்க வேண்டும்.
பொதுத்துறையான எல்.ஐ.சி. போன்ற நிறைய நிறுவனங்கள் உள்ளன. அவற்றுக்கு இந்த திட்டத்தை கொடுக்காமல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் நிறைவேற்றுகிறீர்கள். இதில் இருந்தே இந்த திட்டம் ஒரு சிலரின் ஆதாய நோக்கத்திற்காக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
இது ஒரு ஏமாற்று திட்டமாகும். இதில் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளை இன்சூரன்ஸ் நிறுவனமே தேர்வு செய்கிறது. அந்த பட்டியலில் “ஏ" வகுப்பில் உள்ள அரசு மருத்துவமனை இல்லை. அரசு மருத்துவமனை “ஏ" வகுப்பில் இத்திட்டத்தில் ஒருவர் சிகிச்சை பெற்றால் அரசுக்கு ஸ்டார் ஹெல்த் பணம் கொடுக்குமா?.
எல்லா இடத்திலும் டெபாசிட் இழப்பீர்கள்:
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: கலைஞர் காப்பீட்டு திட்டம் ஓப்பன் டெண்டர் மூலம் குறைவான பிரிமீயம் கேட்டவருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கலைஞர் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் பொறாமைப்பட்டு இத்திட்டம் பற்றி பேசுகிறார். இந்த திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர் சொல்ல வேண்டும். ஏற்கனவே அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அடுத்த தேர்தலில் எல்லா இடத்திலும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications