ஆஸ்லோவிலிருந்து பிரஸல்ஸ்... டாக்ஸி கட்டணம் ரூ 2.26 லட்சம்!

பிஸினஸ் பெரும்புள்ளிகள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அப்படி சிக்கிக் கொண்டவர்களில் ஒருவர் பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் க்ளீஸ். மோண்டி பைதான், ஃபால்டி டவர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆஸ்லோவில் நடக்கும் ஸ்கான்டிநேவியன் டாக் ஷோவுக்கு வந்திருந்தார் க்ளீஸ். ஐஸ்லாந்து எரிமலை பிரச்சினையில், ஆஸ்லோ விமான நிலையம் மூடப்பட்டதால், ஷோ முடிந்து நார்வேயிலிருந்து வெளியே செல்ல வேறு வழியே இல்லாத நிலை. எனவே டாக்ஸியில் பயணம் செய்துள்ளார் க்ளீஸ்.
"ஆஸ்லோவிலிருந்து ஸ்டாக்ஹோமுக்கு நிறைய டாக்ஸிகள் செல்கின்றன. பாரிஸ் வரை கூட போகிறார்கள். இதுதான் நீண்ட தூர டாக்ஸி பிரயாணம்.
நான் ஆஸ்லோவிலிருந்து பிரஸ்ஸல்ஸ் வரை ரயிலில் போக முயன்றேன். டிக்கெட் கிடைக்காததால் டாக்ஸியில் பயணித்தேன். 3300 பவுண்ட்டுகள் (ரூ. 226,095) செலவானது" என்கிறார் க்ளீஸ். பிரஸ்ஸல்ஸிலிருந்து ஈரோ ஸ்டார் ரயில் மூலம் லண்டன் போய்ச் சேர்ந்தாராம் க்ளீஸ்.
படகில் பயணித்த பாடகி...
இதற்கிடையே ஹாலிவுட்டின் பிரபல பாடகி விட்னி ஹூஸ்டன், டப்ளினில் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு படகில் பயணம் செய்துள்ளார். அனைத்து விமானங்களில் ரத்து செய்யப்பட்ட நிலையில், பர்மிங்காமிலிருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு மூன்றேகால் மணி நேரம் படகில் பயணித்து சென்றுள்ளார். அவரசு இசை நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்ததாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications