சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் கிடா வெட்டி பரிகார பூஜை-ரத்தம் தெளிப்பு
சேலம்:சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக நள்ளிரவில் கிடா வெட்டி பரிகார பூஜை நடத்தப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட கிடாவின் ரத்தம் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் தெளிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 மண்டல அலுவலகங்கள் உள்ளன.
சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்த டிரைவர் ஒருவர் கடந்த மாதம் விபத்தில் இறந்தார். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இந்தப் பிரச்சனைகளை தவி்ர்க்க பரிகார பூஜை நடத்தலாம் என்று ஒரு பிரிவு ஊழியர்கள் முடிவு செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு மாநகராட்சியின் 2வது மெயின் கேட் முன்பு பரிகார பூஜை நடந்தப்பட்டன.
அப்போது ஒரு கிடா வெட்டி பலியிடப்பட்டது. மேலும் பூசணி போன்றவை திருஷ்டி சுற்றி உடைக்கப்பட்டன. எலுமிச்சை பழங்களும் நசுக்கப்பட்டன.
ரத்தமும் சிதறிய பூசணியும் நசுங்கிய எலுமிச்சைளும்யும் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலை முன்பும், மேயர் அலுவலகம் முன்பும், கமிஷனர் அலுவலகம் முன்பும், பொறியாளர் அலுவலகம் முன்பும், மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் இந்த ரத்தக் களறியைக் கண்டு அதிர்ந்தனர்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறுகையில், அலுவலகத்தில் கிடா வெட்டி பூஜை நடந்ததாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. நான் விசாரித்த வரையில் அதை போல நடக்கவில்லை. தற்போது ஈரோட்டில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கூட்டத்தில் நான் இருக்கிறேன். சேலம் வந்ததும் இது பற்றி விசாரிப்பேன் என்று மழுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications