Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து நெருங்குகிறது-வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: கேரள அரசின் சூழ்ச்சியால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக திகழ்கின்ற முல்லைப் பெரியாறு அணையில் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக 152 உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைத்து, தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசனத் தண்ணீரும், லட்சக்கணக்கான மக்களுக்கு குடிதண்ணீரும் பெற்று வந்தோம்.

கேரள அரசு, இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு போவதற்காக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று அப்பட்டமான பொய்யை சொல்லி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்கச் செய்தது. அதனால் நாம் 80,000 ஏக்கர் பாசன உரிமையை இழந்தோம்.

இரண்டு முறை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மிட்டல் குழுவும், பிரார் குழுவும் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமான அறிக்கை தந்து உள்ளன. அதற்கு பின்பும், அணையின் வலுவைப் பற்றி கருத்து அறியவும், புதிய அணை கட்டும் வாய்ப்பு குறித்தும் ஆய்வு செய்ய, உச்சநீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. தமிழகத்துக்கு மிகவும் பாதகமான அறிவிப்பாகும்.

அந்த குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை விட மூத்த நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் விளங்கிய கேரளத்தை சேர்ந்த கே.சி.தாமஸ் என்பவரை திட்டமிட்டே கேரள அரசு குழு உறுப்பினராக அறிவித்திருக்கிறது.

“முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம்" என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் பல கட்டங்களில் கேரள அமைச்சர் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள். தற்போது “முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம்" என்ற முழக்கத்தோடு கைகளில் சம்மட்டி, கடப்பாரைகளோடு கூட்டம் கூட்டமாக வண்டிப் பெரியாறு பகுதிகளில் ஊர்வலம் நடத்த கேரள போலீஸ் அனுமதிக்கிறது.

இதன்மூலமாக அணையை உடைக்க வேண்டும் என்ற வகையில் போராட்டங்களை நடத்த கேரள அரசு தூண்டுகிறது.

இப்படி நடத்தப்படும் போராட்டங்களை ஆவணங்களாக தயாரித்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரள மக்கள் மிகுந்த கொதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பது போன்ற கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடத்தில் உருவாக்க, கேரள அரசு மிக வஞ்சகமாக திட்டமிட்டுச் செயல்படுகிறது.

பூகம்பமே வந்தாலும் முல்லைப் பெரியாறு அணை உடைய வாய்ப்பில்லை. ஆனால் கேரள அரசு உடைத்து விடுமானால் 2,17,000 ஏக்கர் பாசனத்தை இழப்பதுடன், 65 லட்சம் மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் போய், மதுரை மாநகர் உள்ளிட்ட தென் தமிழ்நாடு, தமிழகத்தின் சஹாரா பாலைவனமாக ஆவதை, யாராலும் தடுக்க முடியாது. இந்த பேராபத்து, நம் தலைக்கு மேலே கத்தியாக தொங்குகிறது.

எனவே கேரள அரசின் அக்கிரமப் போக்கை எதிர்த்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவாகும் என்பதை உச்ச நீதிமன்றத்துக்கு உணர்த்துகின்ற நிலையை, தமிழகம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழக வாழ் வாதாரங்களை காக்கவே, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும், ஓரவஞ்சகமாக செயல்படும் மத்திய அரசாங்கத்தை கண்டிக்கவும், மே 28ம் தேதி நடத்த இருக்கும் கேரளம் செல்லும் அனைத்து சாலைகள் முற்றுகைப் போராட்டத்துக்கு தமிழக மக்கள் பேராதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

மின்சாரம் தயாரிக்கவே அணை-கருணாநிதி:

இதற்கிடையே பாம்பாற்றின் குறுக்கே கேரளம் மின்சாரம் தயாரிப்பதற்காகவே அணை கட்டி வருவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தாமோதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து கருணாநிதி கூறியதாவது:

கேரள மாநிலம் மறையூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்கடவு என்ற இடத்தின் வழியாக பாம்பாறு ஓடுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கோவில்கடவுக்கு கீழே சுமார் 1 கி.மீ. தொலைவில் பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு ஒரு அணை கட்டி, மின்சாரம் தயாரிக்க மட்டுமே அந்த தண்ணீரை பயன்படுத்தப் போவதாகத் தெரிய வருகிறது.

இந்த அணையிலிருந்து சுரங்கம் அமைத்து அருகில் உள்ள நாச்சிமுத்து ஓடையில் மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரித்த பின்னர் அந்த ஓடை வழியாக பாம்பாற்றிலேயே தண்ணீரை விட திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அணை அமையவுள்ள இடத்துக்குக் கீழே மின் நிலையம் அமைய உள்ள இடத்திலிருந்து தமிழக எல்லை வரை சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு பாம்பாறு ஆழமான பள்ளத்தாக்கில் ஓடிவந்து அமராவதி அணையில் சேர்கிறது.

எனவே, கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையில் இருந்து மின்சாரம் தயாரித்த பின்னர் மீண்டும் பாம்பாற்றின் வழியாகவே அமராவதி அணைக்கு தண்ணீர் வரும் வகையில் தள அமைப்பு உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+