குப்பையில் வீசப்பட்ட ஹால் டிக்கெட், எல்ஐசி, வேலைவாய்ப்பு அலுவலக கடிதங்கள்
புதுக்கடை: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே குப்பைத் தொட்டியில் ஹால் டிக்கெட்கள், எல்ஐசி பாலிசி கடிதங்கள், வேலைவாய்ப்பு அலுவலக கடிதங்கள் வீசப்பட்டிருந்த்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கடை அருகே கீழ்குளம் சந்திப்பில் துணை தபால் நிலையம் உள்ளது. நேற்று காலை கீழ்குளம் சந்திப்பு பகுதியில் உள்ள சாக்கடையில் தபால்கள் வீசப்பட்டு கிடந்தன. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் தபால்களை சேகரித்தனர். மொத்தம் 65 தபால்கள் இருந்தன. இவை இந்த மாதம் பல பகுதிகளில் இருந்து கீழ்குளத்தி்ற்கு அனுப்பப்பட்டவை.
அதில் மாவட்ட துணை இயக்குனர் அலுவலகம், குடும்ப நல அலுவலகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியத்தில் இருந்து அனுப்பிய தபால்களும் இருந்தன. மேலும் கடந்த 11ம் தேதி நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தொழிக்கோடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், மற்றும் கீழ்க்குளம் பீடகை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் லீமா ஆகியோருக்கு அனுப்பிய ஹால் டிக்கெட்டுகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பாறக்கான்விளை பகுதியை சேர்ந்த தினகரனுக்கு அனுப்பிய தபால், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்து வந்த காப்பீடு பாலிசி தபால்கள், பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு மாணவர்களுக்கு அனுப்பிய தபால்களும் இருந்தன.
இதுப்பற்றி அப்பகுதியினர் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் குருசாமி கூறுகையில், தபால் நிலைய தபால்கள் சாக்கடையில் வீசியது தொடர்பாக குழித்துறை தபால் பொறுப்பு அதிகாரிகளிடம் இருந்து விசாரணை அறிக்கை வந்ததும் சம்பந்தப்பட்ட தபால் ஊழியர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications