சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: இத்தாலியில் தமிழக பாதிரியார் கைது – வீட்டுக் காவலில் வைப்பு

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேவிட். இத்தாலியின் ரோம் நகரில் பாதிரியாராக உள்ளார். 40 வயதான இவர் ரோம் அருகே உள்ள டெரமா என்ற நகரில் வசித்து வருகிறார்.
இவர் 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டேவிட் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டை டேவிட் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என டேவிட்டின் வக்கீல் கியோவன்னி ஜெபியா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெபியா கூறுகையில், டெரமா நகரில் உள்ள தனது வீட்டில் டேவிட் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள கான்வென்ட்டில் வார இறுதி பிரார்த்தனையில் அவர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. தற்போது தனது வீட்டில் பிரார்த்தனை செய்து கழித்து வருகிறார் டேவிட் என்றார் ஜெபியா.
கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டேவிட்டின் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுமி டேவிட் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சான்டா கிளாஸ் பொம்மையைப் பரிசாக அளித்த டேவிட், அச்சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து அக்கிரமம் செய்துள்ளார்.
அவரிடமிருந்து மீண்டு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதைத் தெரிவிக்கவே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து டேவிட் கைது செய்யப்பட்டார்.
தற்போது தனது குற்றத்தை அவர் ஒத்துக் கொண்டதால் அவர் மீதான விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது. அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
1987ம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டவர் டேவிட். அதன் பின்னர் அவர் இத்தாலிக்கு வந்து அங்கு செயல்படத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications