ஐபிஎல் அணிகளின் முதலீடுகள், லாபம் குறித்து விசாரிக்க 8 குழுக்கள்

ஐபிஎல் கொச்சி விவகாரத்தைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகம், மோடியின் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. மேலும் மோடியையும் 8 மணி நேரம் அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த ரெய்டின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் தற்போது எட்டு குழுக்களை வருமான வரித்துறை அமைத்துள்ளதாம்.
ஐபிஎல் அணிகளின் உரிமையாளர் விவரங்கள், அவர்களின் பண முதலீடுகள், லாபங்கள் உள்ளிட்டவை குறித்து இந்தக் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே மோடியை நீக்குவதற்காக இன்று 2-வது நாளாக சசாங் மனோகர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். லலித்மோடி விவகாரத்தில் உடனடி தீர்வு கண்டுவிட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக உள்ளார்.
ஐ.பி.எல். அமைப்புக்கு வரும் நிதி, எங்கிருந்து, யாரால், எப்படி வருகிறது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் மீது விழுந்துள்ள கறையைத் துடைத்தால்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குஏற்பட்டுள்ள அவப் பெயரை துடைக்க முடியும் என வாரிய உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
ஐ.பி.எல். அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் வருகிற 26-ந்தேதி மும்பையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் லலித் மோடியிடம் பதவி விலகும்படி கூறப்படும். அவர் பதவி விலக மறுத்தால், குற்றச்சாட்டுக்களை உறுதி படுத்தும் நோட்டீஸ் வழங்கப்படும்.
அந்த குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்க கேட்டுக் கொள்ளப்படும். அதன் பிறகும் லலித்மோடி பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்து ஐ.பி.எல். நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications