லலித் மோடி தொடர்பாக பிரதமருடன் பிரணாப், ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: லலித்மோடி விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்.பியும், கிரிக்கெட் வாரிய நிதிக் குழுத் தலைவருமான ராஜீவ் சுக்லா, மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பேசினர்.

இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடந்தது. இதுகுறித்து ராஜீவ் சுக்லாவிடம் கேட்டபோது, இது முழுக்க முழுக்க தனிப்பட்ட சந்திப்பு என்றார்.

ஆனால் இந்த கூட்டத்தின்போது மோடிக்கு எதிராக வருமான வரித்துறை திரட்டி வைத்துள்ள ஆதாரங்களை பிரதமரிடம் பிரணாப் விளக்கியதாகவும், அதை ராஜீவ் சுக்லாவுக்குத் தெரிவித்து மோடி எவ்வளவு விரைவில் விலகுகிறாரோ அவ்வளவுக்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விலகாவிட்டால் தூக்குவோம் - சுக்லா எச்சரிக்கை

இதற்கிடையே, லலித்மோடி. பதவி விலகாவிட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஐ.பி.எ.ல். கவுன்சில் கூட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் லலித்மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருமித்த முடிவாக இந்த நடவடிக்கை இருக்கும் இந்த முடிவு கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் நல்லதாக இருக்கும் நாங்கள் எந்த வித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். 60 ஆண்டுகளாக கட்டி காத்ததை விட்டு விடமாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+