டெல்லி டேர்டெவில், புனே அணிகளின் உரிமையாளர்கள் அலுவலகங்களில் ஐடி ரெய்டு

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னை, கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடந்தது.
இந்த நிலையில், இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளரான ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் மற்றும் புனே அணியின் உரிமையாளரான சஹாரா நிறுவனம் ஆகியவற்றின் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.
டெல்லி பரக்கம்பா சாலையில் உள்ள ஜிஎம்ஆர் நிறுவன அலுவலகத்தில் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மும்பையிலிருந்து வந்த ஐடி குழுவினர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல அலிகாஞ்ச் பகுதியில் உள்ள புனே அணியின் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
புனே அணியை கடந்த மாதம் வாங்கியது சஹாரா. அதே சமயத்தில்தான் கொச்சி அணியும் வாங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
அடுத்து கொச்சி அணியின் உரிமையாளர்களான ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் அலுவலகங்களும் ரெய்டுக்கு உட்படுத்ப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல பெங்களூர், மும்பை அணிகளின் அலுவலகங்களும் இன்னும் ரெய்டுக்கு உட்படுத்தப்படாமல் உள்ளன.












Click it and Unblock the Notifications