இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்

Subscribe to Oneindia Tamil

Jayaratne
கொழும்பு: ராஜபக்சேவின் தீவிர விசவாசியும், இலங்கை சுதந்திராக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.எம்.ஜெயரத்னே, இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அதேபோல சபாநாயகராக ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார்.

சுதந்திராக் கட்சியில் ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெயரத்னே. கடந்த அமைச்சரவையில் இவர் தோட்டத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இவரை பிரதமராக்கியுள்ளார் ராஜபக்சே.

78 வயதான ஜெயரத்னே, நேற்று அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 20வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

கம்போலா தொகுதியிலிருந்து கடந்த 1970 ஆண்டிலிருந்து வெற்றி பெற்று வருபவர் ஜெயரத்னே. போஸ்ட் மாஸ்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜெயரத்னே என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே அண்ணனுக்கு சபாநாயகர் பதவி:

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்சே தேர்வாகியுள்ளார். இன்று கூடிய புதிய நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்சே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமல் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் ஆவார். இவரது மகன் சசீந்திர ராஜபக்சே, ஊவா மாகாண முதல்ராக இருக்கிறார். சமல், கடந்த அமைச்சரவையில் துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்.

சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 225 எம்.பிக்களுக்கும் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 144 இடங்கள் உள்ளன. இது மூன்றில் இரண்டு பங்குக்கு 6 இடங்கள் குறைவாகும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 இடங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 14 இடங்களும் கிடைத்துள்ளன.

பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு வெறும் 7 இடங்களே கிடைத்தன.

விடுதலை செய்ய கோரிய பொன்சேகா:

இந் நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தன்மை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினார்.

இலங்கையின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. இதில் கலந்துகொள்ள பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் வரப்பட்ட அவர், அங்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. சட்டத்துக்கு புறம்பாக நான் சிறையில் அடைக்கப்பட்டு பலியாக்கப்பட்டேன். என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+