இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் குறித்து சர்வே!
சென்னை: இலங்கைக்கு செல்ல நினைக்கும் அகதிகள் குறித்து முகாம்களில் கியூ பிரிவு போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின் அகதிகள் பெருமளவில் இலங்கைக்கு திரும்பலாம் என எதிர்பார்த்தனர். அங்கு திரும்பி செல்லும் திட்டத்தை பெரும்பாலான அகதிகள் கைவிட்டுவிட்டனர்.
சிலர் அங்குள்ள சூழலை நேரில் அறிந்து வர இலங்கை செல்ல முயற்சித்தனர். ஆனால், போலீசாரின் அனுமதி கிடைக்காததால், ராமேஸ்வரத்திலிருந்து போலீசாருக்குத் தெரியாமல் படகுகளில் இலங்கை செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதில் பலரை படகோட்டிகள் நான்காம் தீடை தீவில் இறக்கிவிட்டு சென்றனர். இவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மீண்டும் முகாமில் தங்க வைத்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
இந் நிலையில் முகாம்களில் உள்ள அகதிகளில் யார் யார் இலங்கைக்கு திரும்ப ஆயத்தமாக இருக்கின்றனர் என்ற பட்டியலை, கியூ பிரிவு போலீசார் தயாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications