26% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கும் வீடியோகான்
மும்பை: தனது 26 சதவிகித பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கிறது வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ். புதிதாக துவங்கப்பட்ட டெலிகாம் துறைப் பங்குகளை மட்டுமே விற்கிறது இந்நிறுவனம்.
இதுகுறித்து வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கூறுகையில், 'பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வீடியோகானின் டெலிகாம் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவேதான் அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் தற்போது ரூ 12000 கோடி மதிப்புள்ள நிறுவனமாகத் திகழும் வீடியோகான் மேலும் அதிக விரிவாக்கம் பெறும்....', என்றார்.
வீடியோகான் நிறுவனம் சமீபத்தில்தான் சென்போன் துறையில் கால்பதித்தது. தமிழகம், குஜராத் மற்றும் மும்பை வட்டங்களில் சேவையைத் துவங்கியுள்ள இந்த நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு குறி வைத்துள்ளது. இதற்காக ரூ 15000 கோடி வரை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் 3 ஜி சேவையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது பரபரப்பாக நடக்கும் 3 ஜி ஏலத்திலும் பங்கேற்றுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை தனியாருக்கு விற்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே எடிஸலாட் டிபி, யுனினார் போன்றவை தங்களின் கணிசமான பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, விரிவாக்கம் செய்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications