பாஸ்போர்ட் அலுவலக விவகாரம்-எஸ்.எஸ்.கிருஷ்ணாவுக்கு தயாநிதி கடிதம்
டெல்லி: சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் நவீன கம்ப்யூட்டர்களை நிறுவ வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பைசல் செய்யப்படாமல் 26,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதில் 12,000 விண்ணப்பங்கள், போலீசார் மூலம் பெயர், முகவரி உறுதி செய்து, சான்றளிப்பதற்காக காத்திருக்கின்றன.
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போருக்கு போலீஸ் சான்றளிப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. போலீஸ் துறையுடன் ஒத்துழைத்து பணியாற்றும் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை. பாஸ்போர்ட் நிலுவை அதிகரிக்க இது முக்கிய காரணம்.
பாஸ்போர்ட் வினியோகிப்பதில் எந்த தாமதமும் ஏற்படக்கூடாது என்றுதான், மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகங்கள், துரித தபால் நிலையங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் விண்ணப்பங்கள் குவிந்தாலும், அவை சென்னை மண்டல அலுவலகத்தில் தேங்கி விடுகின்றன. இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறைதான் காரணம்.
இன்னொரு வேதனையான விஷயம், சென்னை அலுவலகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி தான். இந்த அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் போதுமான திறன் கொண்டவையாக இல்லை. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் 1995ம் ஆண்டுக்கு முன் வாங்கப்பட்டவை என்பதால், அவை சீராக இயங்குதில் தொடர்ந்து சிரமம் உள்ளது.
இப்படி கம்ப்யூட்டர்கள் பழுதானதால்தான், கடந்த 20ம் தேதி , விண்ணப்பதாரர்கள் கோபமடைந்து விட்டனர்; சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டது, கம்ப்யூட்டர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பைசல் செய்யப்படுவதில் உள்ள தாமதத்தை போக்க ஊழியர்கள் எண்ணிக்கையை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.
அதுபோல, நவீன கம்ப்யூட்டர்களை நிறுவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படி செய்தால், பாஸ்போர்ட் வினியோகிப்பதில் அரசு ஏற்படுத்தியுள்ள வசதிகள் எல்லாம் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications