'தலிபான்களுக்கு அணு ஆயுதம் தர பாக். சதி செய்யலாம்'
வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டாலோ அல்லது காஷ்மீர் பிரச்சனை மிகவும் தீவிரமானாலோ தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை தலிபானிடம் தந்து அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வைக்க பாகிஸ்தான் சதி செய்யலாம் என்று அமெரிக்க அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
Prevention of WMD proliferation and terrorism என்ற அமைப்பின் தலைவர் பாப் கிரஹாம் அமெரி்க்க நாடாளுமன்றத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனை மிகவும் சிக்கலாகி இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டால் இப்படி ஒரு மகா பாதகமான செயலை பாகிஸ்தான் செய்யலாம்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தலிபான்கள் நீண்ட நாட்களாகவே குறி வைத்துள்ளனர். தலிபான்-பாகிஸ்தான் ராணுவத் தொடர்புகள் உலகறிந்தவை.
தலிபான்கள் வசம் அணு ஆயுதங்கள் சிக்கிவிடாமல் தடுக்க வேண்டியது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடமை. அந்த ஆயுதங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தானுடன் இணைந்து தான் நாம் செயல்பட்டாக வேண்டும்.
அதே போல வெள்ளை மாளிகைக்கும் இந்திய, பாகிஸ்தான் உயர் மட்ட தலைவர்களுக்கும் இடையே ஒரு 'ரெட்போன்' தொடர்பை ஏற்படுத்துவதும் அவசியம். மிக அவசரமான காலகட்டங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications