கருணாநிதி, ப.சிதம்பரத்துக்கு ராஜபக்சே எவ்வளவோ மேல்: சீமான்
புதுக்கோட்டை: முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ராஜபக்சே எவ்வளவோ மேல் என்று கூறியள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.
புதுக்கோட்டையில், பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,
சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயைத் திருப்பி அனுப்பியது தெரியாமல் நடந்த நிகழ்வல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். மத்திய உள்துறை அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்திருக்கவே முடியாது. பார்வதி அம்மாள் வந்தது தனக்குத் தெரியாது என முதல்வர் கூறுவது அவருக்கு மிகப் பெரிய அவமானம்.
பார்வதி அம்மாளுக்கு சுயநினைவு கிடையாது, அவருக்கு நினைவு இருந்திருந்தால் நிச்சயம் தமிழகத்துக்கு வந்திருக்கமாட்டார்.
சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பிய இதே அரசுதான் ராஜபக்ஷவின் இரு மகன்களையும் அதே விமான நிலையத்தில் படை பரிவாரங்களுடன் வரவேற்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய அனுப்பி இருக்கிறது.
தமிழினம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இச்சூழலை வென்றெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம். எனவே தமிழர்களுக்கான அரசை விரைவில் நிறுவ அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் சீமான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications