மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக சானியா, சோயப், ஆயிஷா மீது வழக்கு

ஹைதராபாத்தைச் சேர்ந்த மஜ்லிமன்-ஏ உன்னதே முகமதி என்ற அமைப்பின் தலைவர் மவுசின் பின் உசேன் அல்கசாரி ஹைதராபாத் கோர்ட்டில் சோயிப் மாலிக், சானியா மிர்சா, ஆயிஷா உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், சோயிப் மாலிக் முதலில் ஆயிஷாவை திருமணம் செய்யவில்லை என்று நாடகம் ஆடினார். பின்னர் திடீரென ஆயிஷா முதல் மனைவி என்பதை ஒப்புக் கொண்டு விவாகரத்தும் செய்தார்.
ஆயிஷாவின் தந்தை சித்திக்கி ஒருபடி மேலே போய் சோயிப் மாலிக்கால் என் மகளின் வாழ்க்கையே நாசமாகி விட்டது. அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பத்திரிகை, டி.வி.க்களில் பேட்டி கொடுத்தார்.
இதையடுத்த ஆந்திர அமைச்சர் ரகமதுல்லா, ரசூல்கான் போன்றோர் தலையீட்டு சமரசப்படுத்தினர். அப்போது என்ன பேரம் நடந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. இவர்களது இந்த திருமண விவகாரம் எங்களின் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.
எனவே மாலிக், சானியா, அவரது பெற்றோர், ஆயிஷா, அவரது பெற்றோர், ரகமத்துல்லா, ரசூல்கான், திருமணத்தை நடத்திய 2 காஜிக்கள் உள்பட 14 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சானியா-சோயிப் மாலிக் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தர விட்டார். இதையடுத்து பஞ்சராஹில்ஸ் உதவி கமிஷனர் ரவீந்தர் ரெட்டி 14 பேர் மீதும் மத உணர்வை புண்படுத்தியதாக 295 ஏ பிரிவின்படி கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications